சென்னை,

சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு  மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது.

இதன் காரணமாக கடற்கரைக்கு செல்ல தடுப்பு வேலி அமைத்து தடுக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடலில் குளித்த ஒருவர் ர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை வடபழனியை சேர்ந்த செந்தில் என்பவர் தனது நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு குளிக்க வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலை அவரை இழுத்து சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார்,கடலுக்குள் இறங்கி, தண்ணீரில் தத்தளித்த  செந்திலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.