அலங்காநல்லூர்
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
உலகின் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை சுமார் 8 மணிக்கு தொடங்கி உள்ளது. போட்டிகளை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
பூஜைக்குப் பின் வாடி வாசலில் இருந்து முதல் காளை அவிழ்த்து விடப்பட்டது.
இந்த ஜல்லிக் கட்டுப் போட்டியில் 1000 காளைகளும், 1214 மாடு பிடி வீரர்களும் பங்குபெற தயாராக உள்ளனர். சென்ற வருடம் தாமதமாக பிப்ரவரியில் நடந்த இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி தற்போது காணும் பொங்கல் அன்றே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மாலை 4 மணி வரையே காளைகள் அவிழ்த்து விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியை காண அலங்காநல்லூரில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் குவிந்துள்ளனர்.