பாக்தாத்:

ராக்கில்  பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை குண்டு வெடிப்பில் 26 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஈராக் தலைநகர் மத்திய பாக்தாத் தய்யாரன் (Tayyaran Square) சதுக்கத்தில் பாதுகாப்புச் சோதனை சாவடி உள்ளது. அதன்மீது  தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் உள்பட 26 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

இந்த  தய்யாரன்  சதுக்கத்தில் தினக்கூலி தொழிலாளர்கள் வேலை தேடி கூடுவது  வழக்கம். இங்கிருந்து அவர்களை வேலைக்கு அழைத்து செல்வார்கள். இந்நிலையில், தற்கொலைபடையை சேர்ந்தவர்கள் இரண்டு இடங்களில்  அவர்கள்மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்தகொடூர தாக்குதல்களில் அங்கு குழுமியிருந்த தொழிலாளர்கள், ராணுவ வீரர்கள் உள்பட 26 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 90க்கும் மேற்பட்டோர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவலை  கிழக்கு பாக்தாத்தின் சுகாதாரத் தலைவர் டாக்டர் அப்துல் கானி அல் சாடி உறுதி செய்துள்ளார்.

தற்போது  படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஈராக்கில் கடந்த 3 நாளில் நடைபெற்ற 2வது பெரிய தாக்குதல் என கூறப்படுகிறது.