வாஷிங்டன்

மெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் ஒரு இன வெறியன் அல்ல எனக் கூறி உள்ளார்.

கடந்த 11 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார்.   அப்போது அமெரிக்காவில் குடியேறியவர்களைப் பற்றி தகாத வார்த்தைகள் கூறியதாக கூறப்படுகிறது.   இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி,  ஆளும் கட்சி உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்தனர்.    உலகெங்கும் உள்ள பல நாடுகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆப்பிர்க்க நாடுகள் தங்கள் மீது ட்ரம்ப் இன வெறியை காட்டியதாகவும் இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தின.   இதை டொனால்ட் ட்ரம்ப் மறுத்து விட்டார்.   நேற்று மேற்கு பால்ம் பீட் பகுதியில் உள்ள கோல்ஃப் கிளப்பீல் செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது அவர், “நான் ஒரு இன வெறியன் இல்லை.   என்னை நீங்கள் பேட்டி காணும் போது நான் எப்போதும் இன வெறியுடன் நடந்துக் கொண்டதே கிடையாது”  எனக் கூறி உள்ளார்.