சென்னை,

பிரபல  சமூக சேவகியுமான மேதா பட்கர் தமிழகம் வந்துள்ளார். அவருடன் சமீபத்தில் நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் வடகாம் தொகுதியில்  சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற தலித் இனத்தலைவர் ஜிக்னேஷ் மேவானியும் வந்திருந்தார்.

இவர் நேற்று கபாலி பட இயக்குனர் ரஞ்சித்தை சந்தித்து  அவருடன் பொங்கல் விழாவை கொண்டாடினார்.

அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள மக்களை அரசு அப்புறப்படுத்தி வருவதை எதிர்த்து, அவர்களை சந்திக்க வந்த ஆறுகள் மீட்புக்கான சமூக ஆய்வு அறிக்கையை மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு தேசிய ஆலோசகரும், சமூக சேவகியுமான மேதா பட்கர் வந்திருந்தார். அவருடன் ஜிக்னேஷ் மேவானியும் வந்து அங்கிருந்த மக்களுடன் உரையாடினர்.

இதைத்தொடர்ந்து, அவரை  கபாலி பட இயக்குனர் பா.இரஞ்சித் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து ஜிக்னேஷ் மேவானி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து பா.இரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில், “தோழர் ஜிக்னேஷ் மேவானியை சந்தித்தது எதிர்பாராத இனிய தருணம். என் வீட்டுக்கு வருகை தந்தமைக்கு நன்றி. உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துகள். உங்கள் எண்ணங்களுடன் ஒத்துப்போகிறேன். நீங்கள் செய்யும் பணியை தொடருங்கள். உங்கள் மீது மரியாதை கொண்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு பதில் தெரிவித்து,  ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில், “சூப்பர், டூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குநர் பா.இரஞ்சித்தை சந்தித்தேன். இனிமையான நபர். அவருடனான சந்திப்பு அற்புதமானது. பொங்கலை அவருடன் மகிழ்ந்து கொண்டாடினேன்” என டுவிட் செய்திருக்கிறார்.

தலித்துகளுக்கு ஆதரவாக சமீப காலமாக குரல் கொடுத்து வரும் இயக்குனர் ரஞ்சித், குஜராத் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானியுடன்  சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.