பெங்களூரு:
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்துத்வா பிரச்சாரத்தை பாஜக மேற்கொள்ளும் விதமாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாத்தை களம் இறக்கியுள்ளது. கர்நாடகா முதல்வர் சித்தராமையா இந்து விரோதி என்று பாஜக தலைவர் அமித்ஷா விமர்சனம் செய்திருந்தார்.
இதை தொடர்ந்து முதல்வர் பதவியில் கடந்த 5 ஆண்டுகளாக தனக்கு கிடைத்த வெள்ளி பரிசு பெ £ருட்களை தனது சொந்த ஊரில் உள்ள மாலே மகாதேஸ்வரன் சிவன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளார்.
கோவில் நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் தனது வெள்ளி பரிசு பொருட்களை வெள்ளித் தேர் செய்ய நன்கொடையாக வழங்குவதாக சித்தராமையா அறிவித்தார். தேர் செய்ய 400 கிலோ வெள்ளி தேவைப்படும் என்று கோவில் நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். இதற்கு அரசுப் பணத்தை செலவிடுவதற்கு பதிலாக சித்தராமையா இந்த முடிவை எடுத்துள்ளார்.
மாலே மாதேஸ்வரா கோவில் தெற்கு கர்நாடகா சாமராஜ்நகர் எம்எம் ஹில்ஸில் அமைந்துள்ளது. சித்தராமையாவின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் சமூக வலை தள அணி வைரலாக பரப்பி வருகிறது. அதோடு பாஜக போலியான இந்து கட்சி என்றும் பிரச்சாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.