டில்லி:

நீதித்துறையில் எழுந்துள்ள பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என்று இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை சுமூகமாகவும் வேகமாகவும் களைய 7 பேர் அடங்கிய குழுவை அமைப்பதாக இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த குழுவினர் நாளை, நீதிபதிகளுக்கு இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர்.

இது குறித்து இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். நீதித்துறையின் மதிப்பு குலைந்து போவதை நாங்கள் விரும்பவில்லை. நீதித்துறை மீது தளராத நம்பிக்கை மக்கள் கொண்டுள்ளனர்.

பிரச்னையை நீதிபதிகள் மக்களிடம் வெளிப்படுத்தியிருக்கக்கூடாது. நீதித்துறை விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என பிரதமர், சட்ட அமைச்சர் கூறியது வரவேற்கத்தக்கது’’ என்றார்.