இன்று நாடு முழுவதும் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகையால் காசு மாசு ஏற்படுவதாக கூறி, அதை தவிர்க்க அரசு வேண்டுகோள் விடுத்தாலும், பாரம்பரியமான பண்டிகை என்பதால் இன்றளவும் கொண்டாடப்பட்டே வருகிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதுபோல தை பிறக்கும் நாளுக்கு முந்தைய நாளான மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் தமிழர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை ” பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்பதற்கு ஏற்ப, பழைய பொருட்களை தீயிட்டு எரித்து, போகி பண்டிகையை மக்கள் இன்று கொண்டாடு கின்றனர்.
போகி பண்டிகையான இன்று ஒவ்வொருவதும் தங்களது மனதில் உள்ள தேவையற்ற சிந்தனைகளை அழித்து தை மாதத்தை புதிய சிந்தனையுடன் வரவேற்க தயாராவோம்…
போகி ஏன் கொண்டாடப்படுகிறது…
போகி என்றாலே பழையன கழிதலும், புதியன புகுதலும்எ ன்ற தத்துவத்தை நம் முன்னோர்கள் விதைத்து சென்றுள்ளனர். வெறும் பழைய பொருட்களை மட்டும் எரிக்காமல் மன ரீதியாக வேறு சிலதையும் போகியன்று எரிப்பதே சிறந்தது.
போகிக் பண்டிகை என்பது இந்திரன் முதலியோரை பூஜித்து, திருப்தி செய்ய வேண்டிய நாள் என்றும் கூறப்படுகிறது..
போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகள், தேவையில்லாத பழைய பொருட்கள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தினால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம்.
பின்னர் வீட்டின் வாசலை கழுவி சுத்தம் செய்து அழகான கோலம் போடுவது தமிழர்களின் பண்பாடு.
அதேபோல, போகி தினத்தன்று பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாகவும் சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு பிடித்த உணவை படைத்து, புத்தாடகள் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைத்து தீப ஆராதனை செய்து வழக்கத்தில் உள்ளது.
பொதுவாக தை பிறப்பதற்கு முன்பே தமிழர்கள் தங்களது வீடுகளை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வது வழக்கம். அப்போது, தேவையற்ற மற்றும் உபயோகமற்ற பழைய பொருட்களை ஒதுக்கி, அதை போகியன்று தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம்.
பாழ்பட்ட பொருட்களையும் பாழான மனதையும் போக்கி விட்டு புது மனிதனாய் புத்துணர்வோடு வாழ துவங்கு வதே போகி பண்டிகையை கொண்டாடுவதன் நோக்கம். இதனாலேயே இதற்கு போக்கி என்ற பெயர் நாளடைவில் அந்த பெயரே மருவி போகி என்றானதாகவும் கூறப்படுகிறது.
பழங்காலத்தில் பெரியோர்கள், நம்முடைய மனதில் எக்கச்சக்கமான கவலைகளையும், வெறுப்பு, பொறாமை என பல தீய எண்ணங்களை எரித்துவிட்டு பொங்கல் முதல் புதிய மனிதனாக வாழவேண்டும் என்ற அற்புத தத்துவத்தை உண்ர்த்தவே போகி கொண்டாடப்பட்டதாகவும் பண்டைய கால தகவல்கள் கூறுகின்றன.
போகி எரியும்போது, குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலித்து, பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாகவும் போகி கொண்டாடப்படுகிறது.
போகி பண்டிகையான இன்று பழையவற்றையும், பயனற்றவையும் தீ வைத்து எரிப்பதுபோல, நம் மனதில் உள்ள தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்கி தை பிறப்பை வரவேற்க உறுதி ஏற்போம்.