சென்னை:
2017ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1. திருவள்ளுவர் விருது: முனைவோர் கோ. பெரியண்ணன்
2. தந்தை பெரியார் விருது: பா.வளர்மதி
3. அண்ணல் அம்பேத்கர் விருது: டாக்டர் சகோ.ஜார்ஜ், கே.ஜே
4. பேரறிஞர் அண்ணா விருது: அ.சுப்ரமணியன்
5. பெருந்தலைவர் காமராசர் விருது: தா.ரா. தினகரன்
6. மகாகவி பாரதியார் விருது: சு.பாலசுப்ரமணியன் (எ) பாரதிபாலன்
7. பாவேந்தர் பாரதிதாசன் விருது: ஜீவபாரதி
8. தமிழ்த்தென்றல் திரு.வி.க., விருது: வை.பாலகுமாரன்
9. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது: ப.மருதநாயகம் ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது.
வரும் 16ம் தேதி மாலை கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் இந்த விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்குவார்.
விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதி சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்விழாவில் வயதான தமிழறிஞர்கள் 50 பேருக்கு மாதந்தோறும் ரூ.2,500 மற்றும் மருத்துவப்படி ரூ.100 வழங்குவதற்கான அரசாணை வழங்கப்படும்.