சென்னை,
தமிழக தலைமை நீதிபதி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்த்துக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சம்பளம் போதாது என்றால் வேறு வேலைக்கு போக வேண்டியதானே என்று கடுமையாக கூறியிருந்தார். மேலும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை வேலையில் இருந்து நீக்கலாம் என்றும் கூறியிருந்தார்.
பின்னர் அடுத்த நாள் விசாரணையின்போது, தான் சொன்னதை திரும்ப பெறுவதாகவும், ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கும்முன் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும் என்றும் கூறினார்.
தலைமைநீதிபதியின் இந்த உத்தரவு சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர் ராஜகோபாலன் இதுகுறித்து புகார் அளித்தார்.
அதைத்தொடர்ந்து, தலைமை நீதிபதி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.