
டில்லி
இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் தலைவராக தமிழ் நாட்டை சேர்ந்த சிவன் நியமிக்கப் பட்டுள்ளார்.
இஸ்ரோ (INDIAN SPACE RESEARCH ORGANISATION) என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் தலைவராக கிரண்குமார் பதவி வகித்து வந்தார். அவருடைய பதவிக் காலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதை ஒட்டி புதிய தலைவராக தமிழ் நாட்டை சேர்ந்த சிவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவன் சென்னையில் கல்வி கற்றவர். தற்போது இவர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக பணி புரிந்து வருகிறார். அடுத்த வாரம் இவர் பதவி ஏற்பார் என தகவல்கள் வந்துள்ளன.
Patrikai.com official YouTube Channel