சென்னை

ன்று 41 ஆவது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கி உள்ளது.

புத்தகப் பிரியர்களால் ஜனவரி மாதம் ஆவலுடன் எதிர்பார்க்கப் படுவது புத்தகக் கண்காட்சி ஆகும்.    இந்த வருடம் புத்தகக் கண்காட்சி அமைந்தக் கரையில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.   இந்தக் கண்காட்சியை கல்விதுதுறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார்.

இந்தக் கண்காட்சியில் மொத்தம் 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.  மொத்தம் 10 லட்சம் புத்தகங்கள் விற்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.   இந்தக் கண்காட்சியில் 340 பதிப்பாளர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர்.   இந்த கண்காட்சிக்கு மக்களை ஈர்க்கும் வன்ணம் கண்காட்சிக்கு வழி காட்ட ரோபோ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.   மேலும் ஒரு திருவள்ளுவர் சிலை அமைத்து அந்த சிலையுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களை கவருவதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 12 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 5 லட்சம் பேருக்கு இலவச நுழைவுச் சீட்டு வழங்கப் பட்டுள்ளது.   அது மட்டுமின்றி இந்த குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கும் அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.    கண்காட்சியில் அனைத்து புத்தககங்களுக்கும் விலையில் 10% கழிவு தரப்பட உள்ளது.