சென்னை,

நாடு முழுவதும் புதுவேல் எனப்படும் தற்கொலை ஆன்லைன் விளையாட்டு காரணமாக ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்தியாவிலும் புளுவேல்விளையாட்டுக்கு பலர் பலியான நிலையில், மத்திய மாநில அரசுகள் எடுத்த விழிப்புணர்வு காரணமாக புளுவேல் விளையாடுவது தடுக்கப்பட்டது.

மேலும், இந்த விளையாட்டை தடை செய்வது குறித்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் புளுவேல் விளையாட்டு காரணமாக சிலர் தற்கொலை செய்தனர். இந்நிலையில், இதுகுறித்து, இன்றைய கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போது அ.தி.மு.க. உறுப்பினர் செம்மலை இதுகுறித்து கேள்வி எழுபிபினார்.

இளைஞர்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய இணைய தள ‘புளூவேல்’ விளையாட்டை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? என்றும் இணையதளங்களில் சில ஊடுருவுவதை தடுக்க ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதா என கேட்டார்.

இதற்கு பதில் அளித்த தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன்,  “புரட்சித் தலைவி முதல்-அமைச்சராக இருக்கும் போதே இணைய தளங்களை பாதுகாக்க ‘இ-செக்கியூரிட்டி’ வசதி செய்யப்பட்டுள்ளன. இதற்கான இணைய தள பாதுகாப்பு வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக ஒரு உயர் மட்ட தொழில் நுட்ப குழு அமைக்கப்பட்டு அறிவுரை வழங்கி வருகிறது. 24 மணி நேர சைபர் செக்கியூரிட்டி கண்காணிப்பும் கொடுக்கப்படுகிறது என்றார்.

மேலும், புளூவேல் விளையாட்டு, சர்வர் ரஷியாவில் உருவாக்கப்பட்டது. இதை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  இதன் காரணமாக புளுவேலின் தாக்கல்  தற்போது இல்லை என்றார்.

தமிழ்நாட்டில் இளைஞர்களிடம் இந்த விளையாட்டு ஆரம்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது எந்த பாதிப்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.