டில்லி:

ர்ச்சைக்குரிய இந்தியா சீன எல்லைப்பகுதியான  டோக்லாமில் மீண்டும்  சீனப் படைகள் மீண்டும் குவிக்கப்பட்டு வருவதால் மீண்டும் பதற்றம்  ஏற்பட்டுள்ளது.

இந்திய சீன எல்லைப்பகுதியில் டோக்லாம் பகுதியில் கடந்த ஆண்டு சாலைப்பணிகளை துவங்கியவது சீனா. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. அதையடுத்து இரு தரப்பிலும்  படைகள் குவிக்கப்பட்டன. இன்னொரு புறம்  இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்துசீன படைகள் வாபஸ் பெறப்பட்டன.

இந்நிலையில், டோக்லாமில் மீண்டும் சீன மக்கள் ராணுவப்படையினர்  9000 வீரர்கள் முகாமிட்டு எல்லைப்பகுதி யில் சாலைப்பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்,  சீனாவின் டோக்லாமில் இரு தரப்பிலும் படைகள் குறைக்கப்பட்டுள்ளன என்றார்.

அவர் பேட்டியளித்த 24 மணி நேரத்திற்குள்ளாக கடும் குளிர் நிலவிவரும் நிலையில் சீனா மீண்டும் அடாவடியாக படைகளை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.