சென்னை:
முன்னாள் அமைச்சர் கே.என்,நேரு தம்பி ராமஜெயம் கொலை தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமஜெயம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் கடந்தாண்டு இறுதியில் சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ராமஜெயம் மனைவி லதா அளித்த புகாரை ஏற்று சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.