டில்லி:

டில்லியில் இருந்த ஹாங்காங் புறப்பட்ட விமானத்தில் அமெரிக்க டாலர் கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், கடத்தலில் ஈடுபட்ட விமானப்பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.

டில்லியில் இருந்து ஹாங்காங் புறப்பட்ட உள்ள விமானத்தில் அமெரிக்க டாலர்கள் கடத்தப்படுவதாக வந்த செய்தியை தொடர்ந்து அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது,  ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் விமானப்பணிப்பெண்ணாக பணி செய்து வரும் ஒரு பெண்ணிடம் இருந்து   4,80,200 டாலர் (ரூ.3.21 கோடி) தொகையை வருவாய் புலனாய்வு துறை  அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ள அவர், டில்லியை சேர்ந்த ஒரு டிராவல் ஏஜன்சிக்காக இதை செய்ததாக கூறி உள்ளார். அமெரிக்க டாலரை ஹாங்காங்வில் சிலரிடம் கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக தங்கக்கட்டிகளை அவர் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதையடுத்து அந்த பெண்ணிடம் அதிகாரிகள் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருக்கு யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். அமெரிக்க டாலர் கடத்த காரணமாக இருந்த டிராவல் நிறுவன உரிமையாளரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.