சென்னை:
தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப நாளை வரை அவகாசம் அளிக்கப்படுகிறது என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்து வருகிறது. தற்போது தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு வர அரசு அழைத்துள்ளது.
‘‘அவர்களுக்காக நாளை வரை அவகாசம் வழங்கப்படும். நாளை பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. பஸ்சை பாதியில் நிறுத்திவிட்டு சென்றவர்கள், பஸ் கண்ணாடிகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel