லண்டன்:
இங்கிலாந்து நாடாளுமன்ற வைஃபை இணைப்பு மூலம் நான்கு மாதங்களில் இணையதளத்தில் 24,473 முறை ஆபாசம் படம் பார்க்க முயற்சி நடந்திருக்கிறது.
இங்கிலாந்து நாடாளுமன்ற ஊழியர்களிடம் எம்.பி.க்கள் பாலியல் தொல்லை தருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சாரித்து அறிக்கை அளிக்க இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதையடுத்து விசாரணை நடந்து அறிக்கை பிரதமரிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பிரதமரின் முதன்மை செயலாளர் டேமியன் கிரீன் மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது. மேலும், 2008-ம் ஆண்டு டேமியன் கிரீனின் அலுவலக கணிணியில் ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
இதையடுத்து டேமியன் கிரீனை ராஜினாமா செய்ய தெரசா மே உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நாடாளுமன்ற வளாக வைஃபை இணைப்பு மூலம் 24,473 முறை ஆபாச படங்களை இணையதளங்களில் பார்க்க முயற்சி நடந்துள்ளதாக இங்கிலாந்து நாடாளுமன்றம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. ஒரு நிமிடத்துக்கு 9 முறை அதாவது ஒரு நாளைக்கு 169 முறை வைஃபை இணைப்பை பயன்படுத்தி ஆபாச படங்கள் பார்க்க முயற்சி நடந்திருக்கிறது.
ஆனால் இந்த தொடர் முயற்சியை, கனிணி நிபுணர்கள் இடைவிடாதும் தடுத்து வந்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு 2,13,020 முறைய ஆபாச படங்களை பார்க்க முயற்சிக்கப்பட்டதாம். 2016-ம் ஆண்டு இந்த எண்ணிக்கையானது 1,13,208 என குறைந்து போனதாம்.
இந்தத் தகவல்கள் பிரிட்டன் மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளன.