சென்னை,
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருஐம் 12ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரை மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றதை தொடர்ந்து இன்னும் 4 நாட்கள் மட்டுமே (12ந்தேதி) வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு கூட்டத்தொடர் கவர்னர் பன்வாரிலால் உரையுடன் இன்று தொடங்கியது. அதைத்தொடர்ந்து இன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டமன்ற வளாகத்தில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக சட்டசபையின் இந்த கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமை வரை (மேலும் 4 நாட்கள்) மட்டுமே நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து தமிழக சட்டசபை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்
நாளை முதல் மீண்டும் தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து அனைத்து கட்சியினரும் பேசுவார்கள். அதைத்தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் உரை ஆற்றுவார்.
அதைத்தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படும்.
இந்த கூட்டத்தில் இருந்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.