சென்னை:

மிழக சட்டசபைக் கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை சுட்டிக்காட்டி உள்ள ஆளுநர் உரையில், தமிழகத்தில் பெண்களுக்கு இரு சக்கரம் வாங்க வழங்கப்பட்டு வரும் மானியம் 25ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும், நகர் புறங்களில் சுய உதவி குழுக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் உரையில் கூறப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள்:

தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்ற கனவு நனவாக முயற்சி எடுக்கப்படும். கூட்டமைப்பு நிறுவனங்கள் தொடங்க 100 மில்லியன் அமெரிக்க டாலரை கடனாக வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

கிழக்கு கடற்கரை சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் மீதமுள்ள வழித்தடங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும்.

மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப்பணிகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். 

திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலை 16 மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.

நிலைத்த வளர்ச்சி இலக்குகளை 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு எய்த இயலும்.

தூய்மை இந்தியா என்ற தேசிய குறிக்கோளை அரசு அடையும்.

நகர்ப்புறவளர்ச்சி திட்டமும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3.84 லட்சம் வீடு கட்ட இதுவரை ரூ.1,498 கோடி நிதியை மத்திய அரசு விடுத்துள்ளது.

4 தொழில் பூங்கா துவக்கப்படும்

 கடுமையான நிதி நெருக்கடியிலும் தமிழக அரசு ஏழாவது கமிஷனை பரிந்துரைத்துள்ளது.  நலத்திட்ட நிதியும் வழங்கப்படுகிறது.

உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 96, 314 பேருக்கு 61 திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. *

பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி காத்திட தமிழக அரசு பணியாற்றி வருகிறது.

மின்பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகம் ஜெயலலிதா நடவடிக்கையால் மின்மிகை மாநிலமாக மாறியது.

அம்மா மகப்பேறு சஞ்சீவினி திட்டம், அம்மா உணவகம் உள்ளிட்ட அம்மா திட்டங்கள் தொடர்ந்து செயல்படும். *

ஜப்பான் மற்றும் உலக வங்கி நிதியுடன் 4 தொழில் பூங்கா துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கலப்பு பண்ணை முறையை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

அரசு கல்லூரி உள் கட்டமைப்பு மேம்படுத்த ரூ. 210 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆதி திராவிடர் , பழங்குடி இன மக்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

2030க்குள் தமிழகத்தில் நிலைக்கதக்க வளர்ச்சி.

ஜெ., வகுத்த பாதையில் அரசு தொடர்ந்து செல்லும் .

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்…  என கூறி கவர்னர்  தனது  உரையை நிறைவு செய்தார். ‘

அதைத்தொடர்ந்து கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் தமிழில் வாசித்தார்.