நடிகர் ரஜினிகாந்த் அரசியிலுக்கு வரவேண்டும் என்றும், அவர் தமிழக முதல்வர் ஆனால் தான் மாநிலம் பிழைக்கும் என்றும் தீவிரமாக பேசி வருகிறார் தமிழருவி மணியன்.
ஆனால் கடந்த வருடம் ஜல்லிக்கட்டு போராட்ட நேரத்தில், ரஜினியை கடுமையாக சாடியும், கமலை பாராட்டியும் பேசினார் தமிழருவி மணியன்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
அந்த வீடியோவில் தமிழருவி பேசியிருப்பதாவது:
“ஜல்லிக்கட்டு வரவேண்டும் என்பதற்காக தமிழகமே திரண்டது. டில்லியில் உட்கார்ந்து கொண்டு சுப்பிரமணியன் சுவாமி, போராடும் தமிழர்களை பொறுக்கிகள் கூட்டம் என்றார்.
இதற்கு கமல்ஹாசன்,“ட்விட்டரில் ரொம்ப அழகாக சொன்னார், “ஆமாம்… நான் தமிழ்நாட்டு பொறுக்கி.. மற்றவர்களைப் போல டில்லியில் பொறுக்குவதில்லை” என்று. என்று. நான்து மணிநேரம் சொன்னாலும் இவ்வளவு வன்மையாக சொல்ல முடியாது.
இப்பொழுது கூட கமல்ஹாசன், “சசிகலா முதல்வராக வருவதில் எனக்கு விருப்பம் இல்லை. முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் பன்னீர்செல்வம் தவறு செய்தவராக தெரியவில்லை. எனவே அவர் தொடருவதுதான் நல்லது” என்று தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.
கொஞ்சம் ரஜினிகாந்தை சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்..
“ஒரு பக்கம் பார்த்தால் சசிகலாவும் பரவாயில்லை.. இன்னொரு பக்கம் பார்த்தால் பன்னீர்செல்வமும் பரவாயில்லை. வேறொருபக்கம் பார்த்தால் ஸ்டாலின் கூட பரவாயில்லை. அந்தப் பக்கம் பார்த்தால் ராமதாஸ் கூட பரவாயில்லை. எல்லாருமே பரவாயில்லை” என்பார் ரஜினிகாந்த்.
ஒன்று தெரியுமா? எல்லாருக்குமே நண்பனாக இருப்பவன் உண்மையில் எவனுக்கும் நண்பனாக இருப்பது இல்லை என்பதுதான் உண்மை.
ரஜினிகாந்தை நேசிக்கக் கூடியவர்கள் லட்சக்கணக்கானவர்கள் இந்த மண்ணில் இருக்கிறார்கள். நானும் ரஜினிகாந்தை நேசிக்கிறேன். ஆனால் லட்சக்கணக்கானவர்களின் நேசத்துக்குரிய ரஜினிகாந்த், கமல்ஹாசனை போல வாய் திறக்க வேண்டாமா?” என்று ரஜினியை கடுமையாக விமர்சித்துப்பேசியிருக்கிறார் தமிழருவி மணியன்.
அந்த வீடியோ..