
டில்லி:
இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கேசவ கோகலே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பணியில் இருந்து வரும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஜெயசங்கரின் பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய வெளியுறவுத்துறை செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கு பதிலாக புதிய வெளியுறத்துறை செயலாளராக விஜய்கேசவ் கோகலே நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2015ம் ஆண்டு சீனாவின் தூதராகவும், மலேசியாவின் அம்பாசடராக 2010 முதல் 2013 வரை பணியாற்றி உள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் டில்லிக்கு மாற்றப்பட்ட கோகலே தற்போது வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
Patrikai.com official YouTube Channel