
இம்பால்
மணிப்பூரில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் தலை நகரான இம்பாலில் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 6.33 மணி அளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 3.2 ஆக பதிவாகி உள்ளது.
எந்த ஒரு சேதம் குறித்தும் தகவல் இல்லாத போதிலும் அந்த பகுதி வாழ் மக்களிடையே இந்த நில அதிர்வு பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
Patrikai.com official YouTube Channel