சென்னை,
பிறக்கும் புத்தாண்டு, , தமிழகம் தன் அருமை பெருமைகளை மீண்டும் உறுதியுடன் நிலைநிறுத்திக் கொள்ளவும் புத்தாண்டு வழிவகுக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
புத்தாண்டையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். அன்பு, சகோதர மனப்பான்மை, சகிப்புத்தன்மையுடன் வாழ ஏற்ற சூழல் நிறைந்த ஆண்டாக அமையவும், தமிழகம் தன் அருமை பெருமைகளை மீண்டும் உறுதியுடன் நிலைநிறுத்திக் கொள்ளவும் புத்தாண்டு வழிவகுக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.