டில்லி:

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மூலம் இந்திய பொருளாதாரத்திற்கு மத்திய பெரிய அதிர்ச்சி வைத்தியம் கொ டுத்தது. ஆனால், புழக்கத்தில் இருந்த அனைத்து பணமும் திரும்பி வந்துவிட்டது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துவிட்டது.

அதேபோல் ஜிஎஸ்டி.யும் பெரும் குளறுபடிகளை சந்தித்து வருகிறது. இதை வெற்றியாக வெளிப்படுத்தும் வகையில் வருவாய் அதிகரித்துள்ளது என்று கூறி தோல்வியை மத்திய அரசு மறைக்க முயற்சி செய்கிறது. அதோடு இந்த நடவடிக்கையால் கிடைக்கபோகும் வெற்றியை காண இந்தியர்கள் காத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்ப்டடு வருகிறது.

நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாகுறையை சமாளிக்க கூடுதலாக ரூ. 50 ஆயிரம் கோடி கடன் வாங்க போவதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் நிர்ணயம் செய்யப்பட்ட நிதி பற்றாகுறையின் அளவு அதிகரித்திருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்த மாற்றம் எதிரொலிக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். அரசின் செலவு மற்றும் வருவாய்க்கு இடையில் உள்ள இடைவெளி தான் நிதி பற்றாகுறையாக கருதப்படுகிறது.

எவ்வளவு கடன் வாங்க வேண்டும். அதற்குறிய வட்டி எப்படி செலுத்துவது என்பதை முன்கூட்டியே திட்டமி டுவது அவசியம். கடந்த பட்ஜெட் தாக்கலில் போது 20171&18ம் நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தியில் 3.2 சதவீதமாக உள்ள நிதி பற்றாகுறை 3 சதவீதமாக குறைக்கப்படும் என்று அருண்ஜெட்லி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பத்திரம் வெளியீடு மூலம் கூடுதலாக ரூ. 50 ஆயிரம் கோடியை கடனாக திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நிதிபற்றாகுறை அதிகரித்துள்ளதோ? என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. மேலும், நிகர கூடுதல் கடன் எதுவும் இருக்காது. ரூ. 61 ஆயிரத்து 203 கோடி ரூபாய் மதிப்பிலான கருவூல பில்களுக்கு இது பயன்படுத்தப்படும் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த ஆண்டு முழுவதும் பெற்ற கடனை ஒன்றிணைத்தால் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டதை விட கூடுதலாக தான் இருக்கும்.

மோடி அரசு பதவி ஏற்ற 2014ம் ஆண்டு முதலே கச்சா எண்ணைய் விலை குறைந்து இருந்தது. எனினும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை. எனினும் எதிர்காலத்தில் கச்சா எண்ணைய் விலை உயர வாய்ப்பு உள்ளது என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர். இதனால் இந்திய எண்ணைய் சந்தை இந்த நிதியாண்வில் 15 சதவீத உயர்வை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், மத்திய அரசு இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. அதோடு கடந்த 3 ஆண்டு கால விலை வீழ்ச்சியை பயன்படுத்தி பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு பின்னர் முதல் முறையாக மத்திய அரசு தனது கடன் திட்டத்தை அதிகரித்துள்ளது.

நிதி பற்றாகுறையில் எதுவும் தடுமாற்றம் ஏற்பட்டால் மோடியும், ஜெட்லியும் தங்களது இலக்கை நோக்கிய பயணத்தில் தோல்வி அடைய நேரிடும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. அதனால் தேர்தலுக்கு முந்தை ஆண்டில் அதிக செலவு செய்வதை அரசுகள் வாடி க்கையாக கொள்ளும் என்ற கருத்தை இது உண்மையாக்கும் வகையில் அமைந்துள்ளது.