துரா

னது காதலை ஏற்க மறுத்ததால் 16 வயதுசிறுவன் ஒருவன் 15 மாணவியை துப்பாக்கி யால் சுட்டுள்ளார்

உத்திரப் பிரதேசம் மதுரா நகரில் உள்ளது ரோட் வேஸ் காலனி.  இங்கு வசித்து வரும் 15 மாணவி ஒருவரை பள்ளி செல்லும் போது 16 வயது சிறுவன் ஒருவன் தினமும் தொடர்ந்து வந்துள்ளார்.   ஆனால் அந்த சிறுமி அவனைக் கண்டுக் கொள்ளவில்லை.   ஒரு நாள் இருசக்கர வாகனத்தில் வந்த அந்தச் சிறுவன் அந்தப் பெண்ணிடம் தனது காதலைக் கூறி உள்ளார்.   அந்தப் பெண் அதை நிராகரித்து விட்டார்.

இதனால் ஆத்திர்ம் அடைந்த அந்தச் சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மாணவியை சுட்டுவிட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்று விட்டார்.   படுகாயம் அடைந்த மாணவி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கவலைக்கிடமான நிலைமையில் உள்ள அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது.   தலைமறைவாக உள்ள அந்த சிறுவனை போலிசார் தேடி வருகின்றனர்