ஸ்லாமாபாத் :

குல்பூஷன் மனைவியை பாக் அரசு அவமரியாதை செய்ததாக இந்திய அரசு  புகார் தெரிவித்துள்ள நிலையில், அவர் ஏதோ ஒரு பொருளை மறைத்து சிறைக்கு எடுத்தவந்ததாக  பாக். அரசு புகார் தெரிவித்திருக்கிறது.

 

உளவாளி என்று குற்றம்சாட்டி, இந்தியாவைச் சேரந்த குல்பூஷன் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது பாக். அரசு.

தற்போது அந்நாட்டு சிறையில் இருக்கும் ஜாதவை அவரது குடும்பத்தினர் சந்திக்கவும் அனுமதி மறுத்து வந்தது. இந்த நிலையில் நீண்ட போராட்டத்துக்கப் பிறகு,  ஜாதவின் மனைவி மற்றும் தாயார்  அவரதை சந்திக்க அனுமதி அளித்தது.

இதையடுத்து குல்பூஷனின் மனைவி மற்றும் தாயார். பாகிஸ்தான் சென்று சிறையில் இருக்கும் குல்பூஷனை சந்தித்தனர். அப்போது அவர்கள் இருவரையும் பாக்  அரசு அவமரியாதை செய்ததாக இந்திய அரசு புகார் தெரிவித்துள்ளது.

 

அவர்களை மராத்தி மொழியில் பேசக் கூடாது என  பாக் அதிகாரிகள் கூறியதாகவும் மத அடையாளங்களை எடுக்கச் சொன்னதாகவும் அந்த சந்திப்பின் போது இந்திய தூதரக அதிகாரி உடன் இருக்க தடை செய்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் இந்தியஅரசின் குற்றச்சாட்டை பாக். அரசு மறுத்துள்ளது. மேலும், “குல்பூஷனின்  மனைவி அணிந்திருந்த காலணியில் ஒரு சில உலோகப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.    அதனால் அவரை அந்தக் காலணியை கழற்றி நாங்கள் அளித்த காலணிகளுடன் அனுப்பினோம்.    அது மட்டுமின்றி உலோகங்களால் ஆன அவருடைய அணிகலன்கள் யாவும் அவரிடம் திருப்பித் தரப்பட்டுள்ளது.    குல்பூஷனின் தாயார் இந்த சந்திப்புக்காக பாகிஸ்தான் அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்” என்று கூறியுள்ளது.

 

ஆனால் இந்திய அரசு சார்பில் வெளியிட்டுள்ள தகவலில் ஜாதவின் மனைவியிடம் அவருடைய காலணிகளை திரும்பத் தரவில்லை என்பதால் அவர்கள் பாகிஸ்தான் அளித்த காலணியுடன் வெளியே வந்துள்ள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது