சென்னை:

ரியலூர் மாணவி அனிதாவின் சகோதரருக்கு அரசு பணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையில் அரசுப்பணி வழங்கி முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் சகோதரருக்கு. தமிழக அரசின்  சுகாதாரத்துறை யில் அரசுப்பணி வழங்கி முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதற்கான உத்தரவை அவரிடம் வழங்கினார்.

மேலும், அனிதாவின் மரணத்துக்கு நிவாரணமாக அறிவிக்கப்பட்ட ரூ.7 லட்சத்தை, அனிதாவின் தந்தையிடம் முதல்வர் வழங்கினார்.

நீட் தேர்வு காரணமாக தனது கனவு படிப்பான மருத்துவம் கிடைக்காததால், 1176 மதிப்பெண் பெற்ற மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து தமிழக அரசு முதலில்  நிவாரணம் அறிவித்தது. அதை அனிதா குடும்பத்தினர் ஏற்க மறுத்தனர். பின்னர் நிவாரண தொகை 7 லட்சத்துடன், அனிதா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தருவதாக உறுதியளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்ற சென்னை தலைமை  செயலகத்தில், அனிதாவின் சகோதரருக்கு சுகாதாரத்துறையில் பணியும், நிவாரண தொக்கான காசோலையை அனிதாவின் தந்தையிடமும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடனிருந்தார்.