ஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாராங்கிறது.. அவருக்கும் அவரு குடும்பத்துக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம். மத்த எல்லாரும் முடிய பிச்சிக்கிட்டு திறியறாருங்க. (திறியறானுங்கன்னு போட்டா மரியாதைக்கு குறைவுல்ல.. அதான்!)

“அந்த ஆண்டவன் சொல்றான்.. இந்த அருணாச்சலம் சொல்றான்..”, “ எல்லாம் மேல இருக்கிறவன் தீர்மானப்படிதான் நடக்கும்”.. அப்படின்னெல்லாம் இருபத்தியஞ்சு வருசமா ரஜினி சொல்லிக்கிட்டிருக்கிறதில.. அந்த ஆண்டவனே பேஜாரா ஆயிட்டதா கேள்வி.

இப்போ, “வர்ற 31ம் தேதி அரசியல் முடிவை சொல்றேன்.. அதாவது அரசியலுக்கு வர்றேனா இல்லையான்னு சொல்றேன்” அப்டின்னு ரஜினி சொல்லியிருக்காரு.

இந்திய நீதிமன்றங்களைவிட அதிக வாய்தா வாங்கினவரு நம்ம தலைவருதான்னு அவரு ரசிகருங்க பொலம்புகிறாங்க.

டிவி பொட்டியில வேற ஆளாளுக்க உக்காந்துகிட்டு, ரஜினி வருவாரு, வரமாட்டாரு.. வந்தாலும் வருவாரு.. அப்படின்னு அவங்க பங்குக்கு கொழப்புறாங்க.

ரஜினி

ஆக 31ம் தேதி ரஜினி என்ன சொல்லப்போறாருங்கிறதுதானே நாட்ல முக்கிய பிரச்சினை.. அதைத் தீக்கிறது நம்ம கடமை இல்லியா..?

அதனால அன்னைக்கு அவரு என்ன சொல்வாருங்கிறத.. இன்னைக்கே நாம் சொன்னா என்னன்னு யோசிச்சேன்…

செய்திய முந்தித் தர்றதுன்னு சொல்வாங்கள்ல.. அப்படின்னு வச்சுக்குங்களேன்..

யாருகிட்ட கேக்குறதுன்னு ஒரே யோசனை.. கட்டக் கடைசியா ஒருத்தரு  ஞாபகத்துக்கு வந்தாரு.

ஜே.என். எஸ். ச்செல்வன்

இவரு பெரிய ஜோசியரு.. அதாவது எண் கணிதம்னு சொல்வாங்களே.. நியூமராலஜி.. அதுல செம கில்லாடி. எந்த அளவுக்கு கில்லாடின்னா, ஏதேதோ கணக்கு போட்டு தன்னோட பெயரையே jns chelvan (ச்செல்வன்) அப்படின்னு மாத்திக்கிட்டவரு.

இவர விட வேற யாரு, ரஜினி சொல்லப்போறத முன்கூட்டியே சொல்ல முடியும்?

ஜே.என். எஸ். ச்செல்வன் எனக்கு நல்லா தெரிஞ்சவருதான்.

அவருக்கு, மேட்டர சொல்லி போன் போட்டேன்.

ச்செல்வன் கணிப்பு (முதல் பக்கம்)

உடனே அவரு, “அதை ஏற்கெனவே கணிச்சிட்டேனே.. எழுதியே அனுப்புறேன்”னு உற்சாகமா சொன்னாரு.

எனக்கு டென்சன் தாங்கலை.. ! நான் ரஜினி ரசிகரு இல்லாட்டியும், ஊடக மனுசன்ல.. அதான் துடிப்பு.

“எழுதுனத அப்புறம் அனுப்புங்க.. 31 அன்னைக்கு ரஜினி என்ன பேசுவாரு.. அதைச் சொல்லுங்க முதல்ல.. படபடப்பா இருக்கு”ன்னு பதட்டமா சொன்னேன்.

ஜே.என். எஸ் ச்செல்வன் சிரிச்சிக்கிட்டே, “கவனமாக கேட்டுக்கோ. ரஜினியோட பிறந்தநாள் 12.12,1950. இந்த தேதியோட கூட்டு எண் 3.

அரசியல் பத்தி அவரு அறிவிக்கப்போறதா சொல்ற நாள் 31.12.2017.  இந்த தேதியோடு கூட்டு எண் 8.

ச்செல்வன் கணிப்பு (ரெண்டாம் பக்கம்)

எப்பவுமே 3-க்கும், 8-க்கும் ஆவாது. ரெண்டும் எதிர்மறையான நாட்கள்.

அதனால அந்தத் தேதியில அரசியல் முடிவை அறிவிக்கிறதா ரஜினி தீர்மானிச்சிருக்கக்  கூடாது.” அப்படின்னாரு ச்செல்வன்.

நான், “ஆனா அவருதான் சொல்லிட்டாரே.. அவரு ஒரு முடிவு பண்ணிட்டா அதுக்கப்புறம் அவரு சொன்னாக்கூட அவரு கேக்க மாட்டாரே” அப்படின்னேன்.

ச்செல்வன், “அடேய்.. கூமுட்டை. அந்த டயலாக்கை சொன்னது விஜய்”ன்னு சொல்லி என்னைத் திருத்தினாரு.

“சரிங்க சார்.. 31ம் தேதி ரஜினி என்ன அறிவிப்பாரு.. அதைச் சொல்லுங்க”ன்னு அவசரப்படுத்தினேன்.

முத்து படத்துல ரஜினி

“அதான் சொன்னேனே.. ரஜினி பிறந்த தேதியோட கூட்டு எண்ணுக்கும் அவரு அரசியல் முடிவை அறிவிக்கப்போறதா சொல்ற கூட்டு எண்ணுக்கும் ஆவாது.

அதனால் ரொம்ப விரக்தியான மனநிலையில இருப்பாரு.  அரசியலே வேணாம்னு தீர்மானிப்பாரு. அரசியல் மட்டுமில்ல.. குடும்பம், பந்தம், பாசம்  இதெல்லாம் தேவையாங்கிற கேள்வி மனசுக்குள்ள வரும். அதனால எல்லாத்தையும் விட்டுட்டு முழுநேர ஆன்மிகவாதியா ரஜினி ஆயிடுவாரு.. அதைத்தான் அன்னைக்கு அறிவிக்கப்போறாரு”ன்னு சொன்னாரு ச்செல்வன்.

கேக்கவே பக்குன்னு இருந்துச்சு… ரசிகருங்க துடிச்சிப்போயிருவாங்களே!

கண்ணு கலங்க போனை வச்சேன்.

முத்து படத்துல வர்ற, “விடுகதையோ.. இந்த வாழ்க்கை” பாட்டு மைண்ட் வாய்ஸா தலைக்குள்ள  கேட்டுச்சு.

ஒங்களுக்கு?