
சென்னை
சசிகலா உறவினர் கார்த்திகேயன் இல்லம் உட்பட ஆறு இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
சிலகாலம் முன்பு சசிகலாவின் உறவினர்கள் பலருடைய இல்லங்கள் மற்றும் அவர்கள் சம்மந்தப் பட்ட அனைத்து இடங்களிலும் வருமான வரிச் சோதனை நடைபெற்றது தெரிந்ததே.
இன்று சசிகலாவின் உறவினரான கார்த்திகேயனின் இல்லம் உட்பட ஆறு இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வந்துள்ளது.
கார்த்திகேயன் வீடு, மிடாஸ் ஆலை, அலுவலகம், சாய் காட்டன்ஸ் அலுவலகம் உள்ளிட்ட ஆறு இடங்களில் சோதனை தற்போது தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
Patrikai.com official YouTube Channel