டில்லி,

ந்தியாவில் குழந்தைகள் திருமணம் அதிக அளவில் நடைபெறும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று மத்திய குற்ற ஆவன காப்பகம் அறிவித்து உள்ளது.

குழந்தை திருமண‌த்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது,

கடந்த 2016 ஆண்டு தமிழகத்தில் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 55 வழக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த   2015-ம் ஆண்டில் 77 வழக்குகள் பதிவாகி உள்ள நிலையில், 2016ம் ஆண்டு இது 55ஆக குறைந்துள்ளது.

தமிழகத்துக்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 51 வழக்குகளும், மூன்றாவது 41 வழக்குகள் பதிவாக மேற்கு வங்கம் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

அதேவேளையில்,  அருணாச்சல பிரதேசம், பீகார், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், சண்டிகர், லட்சத்தீவு, கோவா ஆகிய மாநிலங்களில் ஒரு வழக்கு கூட பதிவாக வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நாடு முழுவதும்  திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் மொத்தம் 326 வழக்குகள் பதிவாகி  உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.