லக்னோ:

உ.பி மாநிலத்தில் சீரான மின் விநியோகம் இல்லாத காரணத்தால் டார்ச் லைட் வெளிச்சத்தில் 32 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உ.பி. மாநிலம் நவாப்கஞ்ச் பகுதியில் சமூக சுகாதார மையம் ஒன்று உள்ளது. இங்கு மின்சார விநியோகம் இல்லாத சமயத்தில் 32 நோயாளிகளுக்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொண்ட தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளிகளுக்கு படுக்கை வசதி செய்து கொடுக்கவில்லை என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடும் குளிரில் தரையில் படுக்க வைக்கப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.