டில்லி:
நாடு முழுவதும் 275 நதிகள் மாசு அடைந்து வருகிறது என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் காவிரி, பாலாறு, பவானி, தாமிரபரணி, மணிமுத்தாறு, வசிஷ்டா நதிகள் மாசு அடைந்து வருகிறது. ஆலைக் கழிவு நீர் மற்றும் வீட்டுக்கழிவு நீர் ஆகியவற்றால் இது போன்ற மாசு அதிகரிக்கிறது.
நாடு முழுவதும் 275 நதிகள் மாசு அடைந்து வருகிறது. இதனை காப்பாற்ற மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளது.