ண்டன்

செவ்வாய் கிரகத்தில் விழும் தண்ணீர் ஸ்பாஞ்சில் விழும் நீர் போல உடனடியாக பாறைகளால் உறிஞ்சப்பட்டு விடுவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழும் நிலை உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது.    அதன் மூலம் பல புதுப் புது உண்மைகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன.    செவ்வாயில் தண்ணீர் கிடையாது என்பதால் உயிரினங்கள் வாழ்வது இயலாத காரியமாகும்.     ஒரு காலத்தில் செவ்வாய் இந்த அளவு உஷ்ணமாகவும் நீர் நிறைந்தும் காணப்பட்டு இருந்துள்ளது.   அந்த நீர் மறைந்து போனது எவ்வாறு என்பது குறித்து லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆராய்ந்து தன் முடிவை வெளியிட்டுள்ளது.

அதில், “தற்போது நீர் இல்லாத நிலையில் காணப்படும் செவ்வாய் ஒரு காலத்தில் மிதமான தட்ப வெட்ப நிலையில் தண்ணீர் ஆறாக ஓடியபடி இருந்துள்ளது.     கடுமையான பனிக்காற்றாலும்,   கிரகத்தின் காந்த விளைவாலும் அந்த நீர் தற்போது மறைந்துள்ளது.   மறைந்த நீர் எங்கு சென்றது என்பது குறித்து ஆராயப்பட்டது.    பனியாகவோ அல்லது ஆவியாகவோ இந்த நீர் கிடைக்கவில்லை.    அப்போது அங்குள்ள பாறைகள் அமைப்பை ஆராய்ந்ததில் அவை எரிமலை மற்றும் பாறைகள் மாறுபாட்டால் ஸ்பாஞ்ச் போல மாறி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனால் அங்குள்ள நீர் அனைத்தும் இந்தப் பாறைகளால் உடனடியாக உறிஞ்சப்பட்டு விட்டது.    அது மட்டும் இன்றி இங்கு மழை என்பது மிகவும் அரிதான ஒன்று.   அப்படிப் பெய்யும் மழையும் உடனடியாக இந்த பாறைகளால் உறிஞ்சப் பட்டு விடுகிறது.    அதனால் இந்த கிரகம்  முழுவதுமே உடனடியாக காய்ந்து போய் விடுவதால் உயிரினங்கள் வாழ்வது முடியததாக உள்ளது”  என தெரிவிக்கப்பட்டுள்ளது