
சென்னை,
தமிழகத்தில் விரைவில் சூழ்நிலை மாறும் என்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு நிச்சயம் மாறும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறி உள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினரகன் அமோக வெற்றி பெற்றுள்ள சூழ்நிலையில் இல.கணேசனின் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் குறித்து இல.கணேசன் கூறியிருப்பதாவது,
”அதிமுகவை ஆதரிக்கவில்லை என்பதற்காக பாஜக தேர்தலில் போட்டியிட்டது. பாஜகவுக்கு பின்னடைவு என்று கருதினால், திமுகவுக்கும் பின்னடைவு என்றுதான் கருத வேண்டும்.
அதே நேரத்தில் இந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி தினகரன் வெற்றி பெற்றுள்ளார். இது தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் வருவதற்கு முன் நிச்சயம் தமிழகத்தில் சூழ்நிலை மாறும்’.
இவ்வாறு அவர் கூறினார்.
[youtube-feed feed=1]