
டில்லி
மன்மோகன் சிங் பற்றி மோடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நடத்திய போராட்டத்தால் ராஜ்யசபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானுடன் சேர்ந்து சதி செய்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். இது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என நாடாளுமன்ற இரு அவைகளிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்றும் இரு அவைகளிலும் இதனால் கூச்சலும் குழப்பமும் நிலவின. அதை யொட்டி ராஜ்யசபை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel