
டெஹ்ரான்
ஈரானில் நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மீட்புப் பணியினர் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள ஒரு நகரம் மெஷ்கிண்டாஷ்ட் ஆகும். டெஹ்ரானுக்கு தென் மேற்கில் உள்ள இந்த நகரில் நேற்று இரவு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.2 அளவில் பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் தெரிய வரவில்லை. இந்த நில நடுக்கத்தின் தக்கம் தெஹ்ரான் உட்பட ஈரானில் உள்ள பல நகரங்களில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப் பணியினர் விரைந்து சென்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
[youtube-feed feed=1]