நடந்து முடிந்த குஜராத் தேர்தலில் நகரங்களில் பாஜக வெற்றி பெற்றபோது கிராமங்களில் காங்கிரசின் கை ஓங்கியுள்ளதை இத்தேர்தல் வெளிப்படுத்துகிறது. பூத்துகளை நிர்வகிப்பதில் முறையான நடவடிக்கைகள் பாஜகவுக்கு உதவியபோது, அடிமட்டத்தில் பலமான தலைவர்கள் காணப்படாதது காங்கிரசுக்குப் பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது எனலாம். பட்டேல் சமுதயாத் தலைவர் கார்திக் பட்டேலோடு அமைத்த கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதையே இத்தேர்தல் காட்டுகின்றது.
பாஜகவுக்கக் கிடைத்த வாக்குச் சதவிகிதம் 49.1. 2012 தேர்தலோடு ஒப்பிடுகிறபோது 1.25 சதவிகிதம் உயர்ந்தள்ளது. காங்கிரசின் சாக்குச் சதவிகிதம் 41.5. 2012 தேர்தலோடு ஒப்பிடுகிறபோது 2.57 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த தேர்தலோடு ஒப்பிடுகிறபோது காங்கிரசுக்கு 17 இடங்கள் அதிகமாகக் கிடைத்துள்ளன. பாஜகவுக்குப் 14 இடங்கள் பறிபோயுள்ளன. நகர்ப்புறங்களில் 55 இடங்களில் 43 இடங்களைப் பாஜகவும் 12 இடங்களைக் காங்கிரசும் பெற்றுள்ளன. கிராமப்புறங்களிலுள்ள 127 இடங்களில்பாஜக 56 இடங்களையும், காங்கிரஸ் 71 இடங்களையும் வென்றுள்ளது.
வெற்றி பெற்றனவா ராகுலின் தந்திரங்கள்?
காங்கிரசை ஆட்சி கட்டிலில் ஏற்றுவதற்காக இராகுல் செய்த அனைத்து முயற்சிகளும் அனைவருக்கும் தெரியும். இராகுல் காந்தியின் பிரச்சாரம் மிகப்பெரிய நம்பிக்கையை காங்கிரஸ்காரர்களிடம் ஏற்படுத்தியது. குஜராத் வெற்றி அனைத்தையும்விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய பிரச்சாரத் திட்டத்தோடு குஜராத்தை அணுகினார். அத்தோடு, கடைசிகட்ட பிரச்சாரத்தில் தனது தந்திரத்தைப் பயன்படுத்தி வெற்றி வாய்ப்பை தனது பக்கமாகத் திருப்பிக் கொண்டார். ஒவ்வொரு பூத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்த அமித்சாவின் தந்திரங்களும் மிகப்பெரிய பலனை அளித்தன. ஆனால், காங்கிரசின் பூத் நிர்வாகம் மிக மோசமாககக் காணப்பட்டது.
மூன்று இளந்தலைவர்களைத் தனது கூட்டணியில் இணைத்தே தனது தேர்தல் வியூகங்களைக் காங்கிரஸ் வகுத்தது – பட்டேல் சதுாயத் தலைவர் கார்திக் பட்டேல், தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, ஓபிசி அமைப்புகளின் தலைவர் அல்பேஷ் தாகூர். பாஜகவிற்கான எதிர்ப்பின் ஒரு அடையாளமாகவே இந்த மூன்று பேர்களையும் தங்களது கூட்டணியில் இணைத்து வெற்றியைப் பெற இராகுல்காந்தி முயன்றார். பாஜக முன் வைக்கும் குஜராத் மாடல் என்னும் முழக்கத்திற்கு இது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துமென்று கருதினாலும் மோடி மேஜிக் அதையெல்லாம் இல்லாமலாக்கியுள்ளது. பாரதப் பிரதமர் என்னும் வகையில் குஜராத்தின் மக்கள் கூட்டத்தை வாக்குகளாக மாற்றும் முயற்சியை பாஜக செய்தது.
கார்திக் பட்டேல் தனது ஆதரவை காங்கிரசுக்கு அறிவித்தபோது தலித் மற்றும் ஓபிசியின் வாக்குகள் காங்கிரசுக்குக் கிடைக்காது என்று கருதப்பட்டது. பட்டேல் சமுதாய மக்களில் பெரும்பான்மையினர் அவரின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தால் பட்டேல் சமுதாய வாக்குகள் சிதறின. அது பாஜகவுக்கு அனுகூலமாக அமைந்துள்ளது. கார்திக் பட்டேல் காங்கிரசுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்ததுாடு சத்திரிய (ஓபிசி), ஹரிஜன், ஆதிவாசி, தலித் மக்களிடமிருந்து காங்கிரசுக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகள் சிதறிப் போவதற்கான வாய்ப்புகளை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.
பட்டேல் சமுதாயத்திற்குக் குஜராத்தில் 16 சதவிகித வாக்குகள் உள்ளன. பட்டேல் சமுதாயத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குக் குஜராத்தில் இரு கட்சிகளும் சரிசமமாகக் களத்திலிருந்தன. கடந்த தேர்தலைவிட ஒரு சதவிகித வாக்குகள் பாஜபவுக“்கு உயர்ந்தபோது, காங்கிரசுக்கு இரண்டு சதவிகித வாக்குள் உயர்ந்துள்ளன. கடந்த தேர்தலில் பாஜக 31 இடங்களையம் காங்கிரஸ் 21 இடங்களையம் பெற்றிருந்தன.
குஜரத்தின் தெற்குப் பகுதியில் காங்கிரஸ் சிறிதளவு பலனைப் பெற்றுள்ளது எனலாம். பாஜக சிறிதளவு பாதிப்பையும் அடைந்துள்ளது. மொத்தமுள்ள 35 இடங்களில் 25 இடங்களைப் பாஜக பெற்றுள்ளது. கடந்த 2012 தேர்தலில் பாஜக 28 இடங்களைப் பெற்றிருந்தது. 2012 – ல் ஆறு இடங்களைப் பெற்ற காங்கிரஸ் இம்முறை பத்து இடங்களைப் பெற்றுள்ளது. சௌராட்டிரா சச்சு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இங்கு பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது. 2012 தேர்தலில் மொத்தமுள்ள 54 இடங்களில் 35 இடங்களைக் பாஜக கைப்பற்றியிருந்தது. இம்முறை 23 இடங்களையே பாஜக பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 16 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் இம்முறை 30 இடங்களைப் பெற்றுள்ளது. வறட்சி நிறைந்த பகுதிகளைக் கொண்ட சௌராஸ்ட்டிர மக்கள் விவசாயத்தையும் சிறு வணிகத்தையுதே தங்கள் வாழ்வாதரமாக நம்பியுள்ளனர். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நீக்கம் போன்றவை மக்களை மாற்றி சிந்திக்க வைத்துள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.
மத்திய குஜராத்தில் 40 இடங்களில் 25 இடங்களைப் பாஜக பெற்றுள்ளது. 2012 தேர்தலோடு ஒப்பிடுகிறபோது ஐந்து இடங்கள் அதிகமாகப் பாஜக பெற்றள்ளது. காங்கிரசால் 13 இடங்களையெ பெற முடிந்துள்ளது. கடந்த தேர்தலில் பெற்ற இடங்களில் ஐந்து இடங்களைக் காங்கிரஸ் இழந்துள்ளது. இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்குமிடங்களில் பாஜக தோல்வியடைந்துள்ளது. பட்டேல் சமுதாயம் பெரும்பான்மையாக பகுதிகளில் 12 இடங்களைக் காங்கிரஸ் பெற்றுள்ளது. 2012 தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தை மட்டுமே பெற்றிருந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் 13 இடங்களைப் பெற்றுள்ளது. கடந்த தேர்தலோடு ஒப்பிடுகிறபோது ஒரு இடத்தைப் பாஜக இழந்துள்ளது.
காங்கிரசின் செல்வாக்கு உயர்ந்துள்ளது
2002 தேர்தலில் பாஜக 184 இடங்களில் 127 இடங்களைப் பெற்று ஆட்சியமைத்தது. வாக்குச் சதவிகிதம் 49.85. அதற்கடுத்த தேர்தலில் இவ்வெண்ணிக்கை 117 ஆகக் குறைந்தது. வாக்கச் சதவிகிதம் 49.12. கடந்த தேர்தலில் 115 இடங்களைப் பெற்றது. வாக்குச் சதவிகிதம் 48.30.
2002 தேர்தலில் காங்கிரஸ் 51 இடங்களைப் பெற்றிருந்தது வாக்கச் சதவிகிதம் 39.59. அதற்கடுத்த தேர்தலில் 59 இடங்களைப் பெற்றது. வாக்குச் சதவிகிதம் 39.69. 2012 தேர்தலில் 61 இடங்களைப் பெற்றது. வாக்குச் சதவிகிதம் 40.59.
பாஜகவைக் கைவிட்ட கிராமங்கள்
பாஜகவுக்குக் கிராமங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்காத சூழலில் நகரங்கள் அதிக முக்கியத்துவத்தை வழங்கியுள்ளதை இத்தேர்தல் காட்டுகிறது. மோடி குஜஸராத் முதல்வராக இருந்தபோது செய்து வந்த பிரச்சாரமே குஜராத் மாடல். மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் குஜராத்திற்காக ஒன்றுமே செய்யவில்லை என்னும் முழக்கத்தை அன்று மோடி முன்வைத்தார். ஆனால் மத்தியில் மோடி அரசு ஆட்சி அமைத்த பிறகும் குஜராத் கிராம மக்களின் வாழ்வில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை என்று பல்வேறு துறைகளிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. கார்திக் பட்டேலும், ஜிக்ஷே் மேவானியும் அல்பேஷ் தாகூரும் பலமான பிரச்சாரங்களை மேற்கொண்டதோடு இந்தக் குற்றச்சாட்டு வலுப்பெற்றது. அது பாஜக வாக்கு வங்கியைப் பாதித்தது என்றாலும் அதன் வெற்றியைப் பாதிக்கவில்லை.
லோக் சபா தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவதற்கான ஊக்கத்தை இத்தேர்தல் காங்கிரசுக்கு வழங்கியுள்ளது எனலாம். தவறுகளைத் திருத்திக் கொண்டு முன்னேறுவதற்கான வழிகளைக் காங்கிரஸ் சிந்திக்கிறபோது, பாஜகவுக்கு மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவது என்பதே மிகப் பெரிய பணியாக இருக்கும். சிஎஜி அறிக்கைகள் குஜராத்தின் வளரச்சி பற்றிய எதார்த்த நிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஆரோக்கியம், பாதுகாப்பு உட்பட பல துறைகளில் குஜராத் பல மாநிலங்களைவிட பின்தங்கியுள்ளது. பொருளாதார நிலையிலும் தோல்வியடைந்துள்ளது. தேவையான தொழில் வாய்ப்புகளும் இல்லை. திருத்தல்கள் பாஜகவின் பக்கத்தில் தொடங்கப்பட வேண்டும். அவை எந்தளவுக்கு நடைமுறையில் மேற்கொள்ளப்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமமில்லை.