டில்லி,

டந்த மாதம் 30ந்தேதி தமிழகத்தின் தென் மாவட்டங்களை புரட்டியெடுத்த ஓகி புயல் குறித்த பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி., டி.ராஜா வலியுறுத்தி பேசினார்.

தமிழகத்தில் ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் பலத்த சேதத்துக்கு உள்ளாது. அங்கு இன்னும் நிவாரணப் பணிகள் முடிவடையவில்லை. 15 நாட்களுக்கும் மேலாக அங்கு நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று பிரதமர் மோடி ஓகி புயல் பாதிப்பு குறித்து அறிய கன்னியாகுமரி செல்கிறார்.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மாநிலங்களவையில்  இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி டி.ராஜா பேசினார்.

அப்போது “ஒக்கி புயலால் தமிழகம் மற்றும் கேரளாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, ஒக்கி புயல் பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.