
தமிழ்த் திரைப்படங்களில் அஜித்குமார், விஜய் ஆகிய இருவரும் நம்பர் ஒன்னாக விளங்கி வருகின்றனர். இருவருடனும் நடிக்க வளர்ந்து வரும் நடிகர்கள் மட்டுமின்றி பழம்பெரும் நடிகர்களும் விரும்பி நடித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு புகழ்பெற்ற நடிகரான அரவிந்த் சாமி அஜித்குமார் படத்தில் வில்லனாக நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
தளபதியில் அறிமுகமாகி ரோஜா படத்துக்குப் பின் அக்கால இளைஞிகளின் கனவுக் கண்ணனாக திகழ்ந்தவர் அரவிந்த் சாமி. நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் திரைப் பிரவேசம் செய்துள்ள அரவிந்த் சாமி தற்போது வில்லனாக நடித்து வருகிறார். சாக்லேட் ஹீரோவாக புகழ் பெற்ற அரவிந்த் சாமி வில்லன் ரோலிலும் புகழ் அடைந்துள்ளார்.
அண்மையில் அவர் டிவிட்டரில் தனது ரசிகர்களுடன் உரையாடல் நிகழ்த்தி உள்ளார். அந்த நிகழ்வில் ஒரு ரசிகர் “அஜித் படங்களில் வில்லனாக நடிக்க விருப்பம் உள்ளதா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அரவிந்த் சாமி, “தற்போதைக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை” என பதில் டிவிட் பதிந்துள்ளார்.
[youtube-feed feed=1]