பெங்களூரு:

ர்நாடக அரசு , தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் வழங்க முடியாது’ என, கூறியுள்ளது.

கர்நாடகாவில் சரியாக மழை பெய்யாததால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி தண்ணீரை, கடந்த இரண்டு ஆண்டு களாக சரியாக வழங்க வில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.  இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்துள்ளது.  அதனால் கர்நாடகாவிலுள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றனன.  இதனால், காவிரி தீர்ப்பாய தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு தற்போது வரை வழங்க வேண்டிய, 192 டி.எம்.சி., தண்ணீரை வழங்கும்படி, கர்நாடக தலைமை செயலருக்கு, தமிழக தலைமை செயலர், சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த கடிதத்துக்கு கர்நாடக அரசு, பதில் அளித்துள்ளது.    அதில், “ ஏற்கனவே நாங்கள், 95 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்துக்கு வழங்கியுள்ளோம். மீண்டும் மழை பெய்தால் தண்ணீர் வழங்குவோம்.  உடனடியாக தண்ணீர் வழங்க முடியாது.  தற்போது இங்குள்ள தண்ணீர், வரும் கோடைக்காலத்துக்கு குடிப்பதற்காக தேவைப்படும்.

கர்னாடகத்தைப் தமிழகத்திலும், இம்முறை கணிசமான அளவு மழை பெய்துள்ளது.
கர்நாடகாவும் தண்ணீர் வழங்கியுள்ளதால், தற்போதைய சூழ்நிலையை தமிழ்நாட்டால் சமாளிக்க முடியும்.  தவிர, குறிப்பிட்ட அளவு தண்ணீர் தான் வழங்க வேண்டும் என்பது முடியாத காரியம்.  சூழ்நிலைக்கு ஏற்ப மட்டுமே தண்ணீர் வழங்கப்படும்” என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.