சென்னை,
கொள்ளையன் நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் சென்ற இணை ஆணையர் சந்தோஷ் குமார் தலைமையிலான தனிப்படை சென்னை திரும்பியது.
கொள்ளையர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த காவல் ஆய்வாளர் முனிசேகரும் சென்னை திரும்பினார். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்.
சென்னை ரெட்டேரி அருகே நகைக்கடையில் கொள்ளையடித்து சென்ற ராஜஸ்தான் மாநில கொள்ளையர்களை பிடிக்கமதுரவாயல் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, அங்கு கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானார். மேலும், இன்ஸ்பெக்டர் முனிசேகர் படுகாயம் அடைந்தனர்.
அதைத்தொடர்ந்து, இச்சம்வம்குறித்து விசாரிக்க, சென்னை மேற்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் சந்தோஷ்குமார், ராஜஸ்தான் சென்றார்.
அங்கு ராஜஸ்தான் மாநில காவல்துறையினருடன் இணைந்து, இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தை ஆய்வுசெய்து விசாரணை நடத்தினார். அதையடுத்து, நாதுராம், தினேஷ் சவுத்திரி கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் சென்ற தமிழக போலீஸார் அனைவரும் தற்போது சென்னை திரும்பியுள்ளனர். ராஜஸ்தானில் சிகிச்சைபெற்று வந்த இன்ஸ்பெக்டர் முனிசேகரும் சென்னை திரும்பியுள்ளார்.