சென்னை:

ஒரு வருடத்திற்கு பின் தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயம் வந்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார். சுமார் ஓராண்டிற்கு பின் கருணாநிதி அண்ணா அறிவாலயம் வந்தது குறிப்பிடத்தக்கது.

வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் அவர், நீண்ட நாட்களுக்கு பின் அறிவாலயம் வந்ததால் திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும், கட்சியினரும் மகிழ்ச்சியடைந்தனர். திமுக செயல்தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், ஆ.ராசா ஆகியோரும் உடன் வந்தனர். 20 நிமிடங்கள் வரை கருணாநிதி அறிவாலயத்தில் இருந்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.