டில்லி,

ன்மிக சுற்றுலர்த்தலங்களான ஹரித்துவார் மற்றும் ரிஷிகேசில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் பசுமை தீர்ப்பாயம் அதிரடி தடை விதித்துள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி. மேத்தா என்பவர்  தொடர்ந்த வழக்கில், பசுமை தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் போன்றவற்றால் நாட்டின் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் பசுமை தீர்ப்பாயம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் கங்கை போன்ற புன்னிய நதிகள் மாசடை கின்றன. இதன் காரணமாக ஹரித்துவார் முதல் ரிஷிகேஷ் வரை கங்கை நதிக்கரையில் உள்ள அனைத்து நகரங்களிலும், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், சேமித்து வைக்கவும்   தடை விதிக்கப்படுவதாக,  தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

மேலும், உத்தரவை மீறினால்   5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.