டில்லி

ரசியல் எதிரிகளான யோகி ஆதித்யநாத் மற்றும் அசாம் கான் இருவரும் உ பி சட்டமன்றத்துக்கு  ஒன்றாக கைகோர்த்துக் கொண்டு வந்தனர்.

உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சமாஜ்வாதி கட்சித்தலைவர் அசாம் கான் இருவரும் அரசியலில் கடும் விரோதப் போக்கை கொண்டவர்கள்.    சூரிய நமஸ்காரம் செய்வதைப் பற்றி யோகி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலடியா அசாம் கான் இஸ்லாமியர்களின் தொழுகையான “நமாஸ்” குறித்தும் யோகி அறிக்கை வெளியிடுவாரா என வினவி இருந்தார்.

அதற்கு பதிலடியாக யோகி குஜராத்தில் இஸ்லாமியர்கள் மோடிக்கு வாக்களிப்பதாகவும் அவர்களைப் பார்த்து  பெருந்தன்மை என்றால் என்பதை அசாம் கான் தெரிந்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறி இருந்தார்.   அதற்கு அசாம் கான் இஸ்லமியர்கள் மோடிக்கு வாக்களித்தது பயத்தினாலும் கட்டாயத்தினாலும் என பதில் அளித்தார்.

நேற்று நடந்த உத்திரப் பிரதேச சட்டமன்றக்  கூட்டத் தொடருக்கு யோகியும் அசாம் கானும் ஒன்றாக வந்தனர்.   இருவரும் சிரித்துப் பேசியபடி கைகளைக் கோர்த்த வண்ணம் வந்ததை பார்த்த பலரும் வியப்படைந்துள்ளனர்.