டலூர்

ய்வு நடத்த சென்றுள்ள ஆளுனருக்கு திமுக கருப்புக் கொடி காட்டி உள்ளது.

தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் மாநிலத்தின் பல இடங்களில் அரசுப் பணி பற்றி ஆய்வுகள் செய்து வருகிறார்.   இது குறித்து பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.   தேவை இல்லாமல் அரசுப் பணிகளில் ஆளுனர் தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் இன்று கடலூரில் ஆய்வு நடத்தச் சென்றுள்ளார்.   அதற்கு அந்தப் பகுதியில் உள்ள திமுகவினர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   இந்நிகழ்வு அந்தப் பகுதியிலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.