சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதியில், மதுசூதனுக்கு வாக்களிக்கும்படி  ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் பணம் கொடுத்ததை படமெடுத்த ஜெயா டிவி செய்தியாளர் முருகன் தாக்கப்பட்டார். அவரது கேமரா உடைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அரசியல் கட்சியினர் வாக்களிக்க பணம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், அந்த தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் மதுசூதனனுக்கு ஆதரவாக வாக்க்ளிக்க கோரி, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து, அந்த இடத்துக்கு சென்ற ஜெயா டிவி செய்தியாளர், பணம் கொடுப்பதை படம் எடுக்க முயற்சித்துள்ளார்.

இதை பார்த்த, பணம் கொடுப்பவர்கள், அந்த செய்தியாளரை அடித்து உதைத்து, அவரது காமிராவையும் உடைத்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்  தண்டையார் பேட்டை போலீஸ் ஆய்வாளர் ரவீந்திரனை சந்தித்து புகார் கொடுத்தார். ஆனால், ஆய்வாளரோ, செய்தியாளரை,  நீங்கள் ஏன் அங்கு போனீர்கள் என்று கேட்டு புகாரை வாங்க மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே,  நேற்று கேப்டன் டிவி செய்தியாளரை அமைச்சர் ஒருவரே பகீரங்கமாக மிரட்டியது குறிப்பிடத்தக்கது.