பாரிஸ்

ரு ஏழைக்கு பாரிஸ் விமான நிலைய அலுவலகத்தில் இருந்து 3 லட்சம் யூரோக்கள் (ரூ.2.3 கோடி) கிடைத்துள்ளது.

பிரெஞ்சு நாட்டின் தலை நகரான பாரிசில் உள்ள விமான நிலையத்தில் உள்ள குப்பை தொட்டியில் ஒரு 50 வயது மதிக்கத் தக்க நபர் குப்பைகளை பொருக்கிக் கொண்டு இருந்துள்ளார்.    அவர் அங்குள்ள மணி எக்ஸ்சேஞ்ச்  அலுவலகத்தின் பின்பக்கம் உள்ள குப்பை தொட்டியை நோண்டிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக பின் பக்கக் கதவு திறந்திருப்பதை கண்டுள்ளார்.

உள்ளே சென்ற அவருக்கு ஒரு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது.   உள்ளே இரண்டு பைகளில் பணம் நிறப்பட்டு அங்கு இருந்தது.   ஆளில்லா அந்த அறையில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு அந்த மனிதர் சந்தடி செய்யாமல் சென்று விட்டார்.   அந்தப் பைகளில் மொத்தம் 3 லட்சம் யூரோக்கள் இருந்துள்ளது.    இதன் மதிப்பு இந்திய ரூபாயில்; ரூ. 2.3 கோடி ஆகும்.

இது குறித்து போலீசில் புகார் செய்யப் பட அவர்கள் வந்து சோதனை செய்துள்ளனர்.

போலீசார் முதலில் இது ஒரு கூட்டுச் சதி என முதலில் கருதினர்.   பிறகு அங்கு பதிந்திருந்த சிசிடிவி பதிவைக் கண்டதும்  அவர்களுக்கு இது அந்த மனிதருக்கு அடித்துள்ள அதிர்ஷ்டப் பரிசு என புரிய வந்தது.    அந்த மனிதரை சிசிடிவி அடையாளங்களைக் கொண்டு தேடி வருகின்றனர்.   இந்த செய்தி பதிவாகும் வரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை.