ஆமதாபாத்,

குஜராத் சட்டமன்ற பதவி காலம் ஜனவரியில் முடிவடைவதை தொடர்ந்து, அங்கு  தேர்தல் அறிவிக்கப்பட்டது.  ஏற்கனவே முதல் கட்ட வாக்குப் பதிவு முடிவுற்ற நிலையில் நாளை இரண்டாவது கட்டமாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் 2வதுகட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. ஏற்கனவே முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 9ந்தேதி வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், நாளை 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள 93  93 தொகுதிகளில்  851 வேட்பாளர்கள் களத்தில் உள்ள னர்.  இவர்களில்பா.ஜனதா சார்பில் 93 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 91 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இவர்களில் 69 பேர் பெண்கள்.

இது தவிர மாயாவதியின்  பகுஜன் சமாஜ் கட்சி 75 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ்-28 இடங்களிலும், சிவசேனா-17 இடங்களிலும்,  ஆம்ஆத்மி-8 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு-3 இடங்களிலும்,  இந்திய கம்யூனிஸ்டு-1 இடத்திலும், மற்ற உதிரிக்கட்சிகள் சார்பாக 185 வேட்பாளர்களும் களமிறங்கி உள்ளனர்.

நாளை வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிளில் 2.22 கோடி பேர் வாக்களிக்க இருப்பதாகவும், இவர்களில் 1.15 கோடி பேர் ஆண்கள், 1.07 கோடி பேர் பெண்கள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாளை ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையுடன், துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

நாளைய வாக்குப்பதிவின்போது, ஏற்கனவே  முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற 4 தொகுதி களில் உள்ள 6 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கை  வருகிற 18-ந்தேதி  நடைபெற உள்ளது.

குஜராத்தில் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்து வந்துள்ள நிலையிலும், பட்டேல் சமூகத்தினரின் ஆரவும் கிடைத்துள்ள நிலையில, சமீபத்தில் வெளிவந்த கருத்து கணிப்பில் பாஜவும், காங்கிரசும் சம பலத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குஜராத் தேர்தல்  நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வெற்றிவாசை சூடப்போவது பெறப்போது யார்? என்பதை இன்னும் 6 நாளில் தெரிந்து கொள்ளலாம்.