சென்னை,

மிழகத்தில் நகைக்கடையில் கொள்ளையடித்து சென்ற ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்றிருந்த தமிழக போலீசார்,அங்கு  கொள்ளையர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நடைபெற்ற  துப்பாக்கிச் சண்டையில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உயிர் இழந்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வேட்டையின்போது,  ராஜஸ்தான் காவல்துறையினர் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாகவும்,  இது திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகம்  இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான திரைப்படக்காட்சி போல இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள், ராஜஸ்தானில் அவர்கள் தங்கியிருந்த கிராமத்தில்  அவ்ர்களை தமிழக போலீசார்  பிடிக்க  முன்னேறியபோதுதான், அந்த கிராமத்தினரின் கல்லெறி சம்பவம் காரணமாக பெரியபாண்டி கொள்ளையர்களால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னை ரெட்டேரி அருகே உள்ள லட்சுமிபுரத்தில் உள்ள ‘மகாலட்சுமி தங்க மாளிகை’ என்ற  நகைக்கடையின் மேல் தளத்தில் வாடகைக்கு இருந்த கொள்ளையர்கள், காங்கிரிட் தளத்தை துளையிட்டு, பட்டப்பகலில், மதிய உணவு இடைவேளையின்போது,  நகைக்கடையில் இருந்து சுமார் 3.5 கிலோ தங்கத்தை கடந்த நவம்பர் 16ந்தேதி அன்று கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்த சிசிடிவி பதிவுகள் வெளியான நிலையில், இந்த கொள்ளை தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, இந்த கொள்ளையில் ஈடுபட்ட  நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் கொள்ளையர்கள் இருவரும்  ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க  காவல் ஆய்வாளர் பெரியபாண்டி தலைமையில் தனிப்படையினர் ராஜஸ்தான் விரைந்தனர்.

ஏற்கனவே சென்றபோது அவர்களை பிடிக்க முடியாமல் திரும்பிய காவல்துறையினர், தற்போது அவர்கள் அந்த பகுதியில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவல்களை தொடர்ந்து , கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ராஜஸ்தான் சென்றனர்.

அப்போது, கொள்ளையர்கள்  பாலி மாவட்டம் ஜெய்த்ரான்  காவல் எல்லையில் ராம்புர்கலான் என்ற கிராமத்தில் பதுங்கி இருபதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து  இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி, முனிசேகர் குழுவினர்   அதிகாலை 2-30 மணி அளவில் ராம்புர்கலான் கிராமத்தில் உள்ள  கொள்ளையர்கள் பதுங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

அப்போது கொள்ளையர்கள் பெரிய பாண்டியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

தமிழக போலீசார்மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ராஜஸ்தான் போலீசாரும் காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.

கொள்ளையர்கள் பதுங்கி இருப்பது குறித்து அந்த பகுதி காவல்நிலையத்தித்தில் தகவல் தெரி வித்ததாகவும், ஆனால்  அவர்கள் ஒத்துழைக்க மறுத்ததாலும், மொழி பிரச்சினை காரணமாகவும் கொள்ளை யர்கள் தமிழக போலீசார்மீது துப்பாக்கி சூடு நடத்த முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும், கொள்ளையர்கள் பதுங்கி இருந்த கிராமத்தை சேர்ந்த  மக்கள் கொள்ளையர்களுக்கு ஆதரவாக திரண்டு, தமிழக போலீசார் மீது  கல்லெறி சம்பவத்தில் ஈடுபட்டதாலும் தமிழக போலீசாரால் கொள்ளையர்களை நெருங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இருந்தாலும்  கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி முன்னேறியதாகவும்,  அப்போதுதான் கொள்ளையர்கள் சுட்ட குண்டு அவர்மீது பாய்ந்தது என்று கூறப்படுகிறது. இதனால் அவர் நிலைத்தடுமாறினார். மேலும் அதே நேரத்தில், முனிசேகர் மீதும் குண்டு பாய்ந்தது. சுமார் 5 நிமிடம் நீடித்த துப்பாக்கி சண்டை காரணமாக அந்த இடம் போர்க்களம் போல காட்சியளித்து

இந்த நிலையில், செய்வதறியாது போலீசார்  திகைத்த நேரத்தில், சம்பவத்தை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. இது கொள்ளையர்களால் திட்டமிட்ட சதியா  என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்து ஓடிய திரைப்படமான தீரன் அதிகாரம் திரைப்படத்தி லும், பவாரியா கொள்ளையர்களுக்கு ஆதரவாக அந்த கிராம மக்கள் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபடுவதை காண்பித்திருந்தது. அதுபோல அந்த பகுதி காவல்துறையினரும் தமிழக போலீசா ருக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பதும், தமிழக போலீசாரை கொள்ளையர்களிடம் காட்டி கொடுப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், தற்போது அதுபோல ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ரியபாண்டி